Saturday, December 3, 2011

வேல் - மயில் - சேவல் விருத்தம்---மத்யமாவதி

அருணகிரி நாதர் அருளியது


திருப்பழனி வகுப்பு
மத்யமாவதி - சதுச்ர த்ருவம் 4 4 4 2 கண்ட நடை (35)

எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வுன் கொடிய எந்த வசியுன் சிறிதும் அணுகாமலே

எந்த இரவுன் தனிமை எந்த வழியும் புகுத
எந்த இடமுன் சபையில் எந்த முகமும் புகலும்
எந்த மொழியுன் தமிழும் எந்த விசையும் பெருமை சிதறாமலே

வந்தனை செய் துன் சரண நம்புதல் புரிந்த அருள்
வந்த் அனுதினன் தனிலும் நெஞ்ஜில் நினைவின் படி வ
ரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி நெடு வலை வீசியே

வஞ்ஜ விழி சண்டன் உறுகின்ற பொழுதுன் குமர
கந்த என நங்க் அறையவுன் தெளிவு தந்துயிர் வ
ருந்து பயமுன் தனிமையுன் தவிர அஞ்ஜலென வரவேணுமே

(முருகேசனே வரவேணுமே


வேல் - மயில் - சேவல் விருத்தம்

No comments:

Post a Comment