Saturday, December 3, 2011

முட்டைக்குள் ஒரு முட்டை

முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!

இங்கிலாந்து விவசாயி ஜெஃப் டெய்லர்(40) மனைவி மிச்செலி (44) உடன் காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார். வேகவைக்கப்பட்ட முட்டை ஒன்றை எடுத்து மேலோட்டை நீக்கத் தொடங்கினார். அதனுள்ளே வெள்ளைக்கருவுக்குப் பதிலாக, இன்னொரு முட்டை இருந்ததைக் கண்டு திகைத்துவிட்டனர் தம்பதியினர்.
“எனக்கு நினைவு தெரிந்து கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். எத்தனையோ முட்டைகளை உள்ளே தள்ளியிருக்கிறேன். இப்படி முட்டைக்குள் முட்டையை முதல் முதலாக இப்போது தான் பார்க்கிறேன்” என்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தையான டெய்லர்.
முட்டைக்குள் முட்டை விஷயத்தை கேள்விப்பட்டதும் டெய்லரின் கிராமமான ஹியர் ஃபோர்டு திரண்டு வந்து பார்த்து அதிசயித்திருக்கிறது.
“கோழி பண்ணை வைத்திருக்கும் நண்பர்கள் யாரும் இவ்விஷயத்ததை நம்ப முடியாமல் திகைத்தனர். நாங்கள்கூட இணையதளத்தில் தேடினோம். பெரிய முட்டை ஒன்றுக்குள் சிறிய அளவிலான முட்டை ஒன்றை ஜப்பான் கோழி ஒன்று எப்போதோ இட்டதாக அறிந்தேன். அதுகூட இது போன்று துல்லியமாக இல்லை” என்று ஆச்சரியத்தில் விழி விரிக்கிறார் டெய்லர். பிரிட்டனின் இயற்கை வரலாற்று கலைக்கூடத்தின் கியுரேட்டரான டக்ளஸ் ரஸ்ஸல், “இது மிகவும் அரிதான விஷயம்தான்” என்று ஒப்புக்கொள்கிறார்.
‘தி நியு சயின்டிஸ்ட்’ பத்திரிகைக்கு அவர் தந்த பேட்டியில், “இதுபோன்ற அரிய நிகழ்வுகளை என் பணிக்காலத்தில் நான் கண்டுள்ளேன். முட்டைக்குள் இன்னொரு முட்டை என்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, ஆராய்ச்சிரீதியாக ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சங்கதியாக இருந்து வருகிறது.
இரட்டை முட்டைகளைப் பற்றி சில தியரிகள் உள்ளன என்றாலும் சாதாரணமாக முட்டை உருவாகும்போது, மஞ்சள் கருவின் மேல் வெள்ளைக் கரு உருவானதும் அடுத்த நிலையில் அதன் மேல் ஜவ்வாடையும், அதற்கு மேல் ஓடும் உருவாகும். அதில் நேரும் பிழை தான் மற்றொரு ஓடு” என்று கூறியுள்ளார். சாதாரண கோழி கூட தன் முட்டையை வித்தியாசமாக இட்டால், உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து விடுகிறது பாருங்கள். அதுதாங்க அதிசயமாக இருக்கிறது.



No comments:

Post a Comment