Thursday, January 24, 2013

யந்திரங்களை எண் வடிவில்

      தெய்வ பக்தி என்பது எவருக்கும் உள்ள தன்மைதான். பிரம்மன் இட்ட முடிச்சை மாற்ற இயலாது எனினும், பழம்பெரும் நம்பிக்கைகளைப் பின்தொடர்ந்து பல நல்ல காரியங்களைத் தொடங்குகிறோம். ஏனென்றால் நல்ல நேரம் அறிந்து அதைச் செய்தால்தான் வெற்றி நம்வசமாகும்.

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் (தோஷங்கள்), தர்ம விரோதச் செயல்கள், பாவ காரியங்கள், நீதிக்குப் புறம்பான செயல்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை யந்திரம்- மந்திரம்- தந்திரம் வாயிலாக செய்து பலன் பெறலாம். நோயை அகலச் செய்ய மருத்துவத்தை நாடுவது போல, யந்திரங்களை எண் வடிவில் வாழ்வோடு இணைத்துக் கொண்டால் சுலப நன்மைகளைப் பெறலாம். இன்றைய வேகமான உலக வாழ்வுக்கு அவரவர் தேவைகேற்ப யந்திரங்கள் சீராகச் செயல்படும்.

"கண்காணி யில்லென்று கள்ளம் பல சொல்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் 
கண்காணி கண்டார் களவொழிந் தாரே!'

என்கிறார் திருமூலர். எனவே, இறைவன் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருளாற்றல் எங்கும் நிறைந்துள்ளது.  அதை நல்ல வழியில் பயன்படுத்தி நன்மை பெற வேண்டியது நம்முடைய பொறுப்பு.

மந்திரமென்னும் மனத்திரை தியானத்தால் பிணி முதலியவை நீங்க, வாயில் செபியாமல் மனத்தால் தியானிப்பது நல்ல பலன் தரும். சகல வியாதியும் நீங்க மஞ்சளால் கணபதி உருவாக்கி வைத்து, அறுகு மலர் சார்த்தி, தாம்பூலம், தேங்காய், பழம், தூப தீபம் செய்து, நேத்திரப் பார்வையை புருவ மையத்தில் வைத்து, இடக்கையால் விபூதியைப் பரப்பி, அதில் பிரணவமெழுதி, "அம் சிங் கிலி' என்று தியானம் ஆயிரத்தெட்டு முறை செய்து, விபூதியை நோயாளிக்குக் கொடுத்து உட்கொள்ளும்படி செய்தால் நோய் அகலும். கெட்ட ஆவிகளும்  அகன்றுவிடும்.

கர்ப்ப நோய் தீர்ந்து போக- கர்ப்பம் தரிக்க தேனும் முலைப்பாலும் கூட்டி, "ஓம் சிறி சிசு' என்று பதினாறு முறை தியானித்து பெண்களை உட்கொள்ளச் செய்தால் பெண்களின் மலட்டுத்தன்மை அகன்றுவிடும்.

பிரசவ கால நோய்க்கு- வெண்ணெயை, "டங், டம்' என்று தியானித்து வயிற்றில் பூசசுகப் பிரசவமாகும்.

கண் புகைச்சல், மாலைக்கண், சூடு, குத்தல், சதைப்படலம் தீர, ஒரு பாத்திரத்தில் தூய்மையான நீரை விட்டு அதை கையில் வைத்துக் கொண்டு "லா லு லீ' என்று தியானித்து, அந்த நீரால் கண்களைக் கழுவிவர கண்நோயின்  வேகம் தணியும். 9 அல்லது 18 முறை கூற வேண்டும். 


நீரைக் கையிலெடுத்து "ஓம்' கிலி, நசி நசி என்று நூற்றியெட்டு முறை தியானித்து அந்த நீரை உட்கொண்டால், படிப்படியாக விஷத்தால் தோன்றிய ஒவ்வாமை நோய் அகலும்.

சகல பயமும் பாவமும் நிவர்த்தியாக சொல்ல வேண்டிய மந்திரம்- "ஓம் றங் றீம் யநம சிவ சகல பாப நிவாரணீ யாமி' என்பது.

இவையெல்லாம் பக்கவிளைவு இல்லாதவை. முயன்று பாருங்கள். ஆன்மிக உணர்வும் திடமான தெய்வ நம்பிக்கையும் அதிகமிருந்து ஈடுபட்டால் நூறு சதவிகித வெற்றி கிடைக்கப் பெறும்.
மேலே தரப்பட்டவை அப்படியே பலன் தர இங்கு தரப்பட்டுள்ள சர்வ சித்தி எண் யந்திரத்தை மோதிரத்தில் பதித்தோ- டாலராக வெள்ளியில் உருவாக்கியோ அணிந்துகொள்ள வேண்டும். முதல் வரிசையில் 9-4-11; நடு வரிசையில் 10-8-6; கடைசி வரிசையில் 15-12-7. இவ்வாறு அமைத்துக் கொண்டால் நவகிரக நாதர்களின் உயரிய பலனை நாம் அனுபவரீதியாக உணர இயலும். முதல் வரிசையில் குரு, சந்திரன், செவ்வாய் பலனும்; நடுவில் சனி, செவ்வாய், புதனின் சக்தியும்; இறுதியில் புதனின் இரட்டிப்பு பலமும் சுக்கிர அருளும் கிடைக்கப் பெறும்.

"ஓம் நம: ப்ரணவார்த்தாய சுத்தஞானநக மூர்த்தியே/
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தியே நம//'

(பிரணவ சரீரமுள்ள சுத்தமான ஞானமூர்த்திக்கு நமஸ்காரம். நிர்மலமான சாந்தமான தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம்) என்று ஒன்பது முறை கூறினால் யந்திரம் முழுப் பலனையும் தரும்.

Friday, December 30, 2011

வெள்ளாள அரசன்

மூவந்தர்களில், சேர மகாராசனைத்தான் வெள்ளாள அரசன் என்று சொல்வார்கள்.. வெள்ளாள அரசி என்பது சேர அரசியை குறிக்குமா?

காராளன் என்பது, மழையை வரவழைக்கும் சக்தி படைத்தவன்.. அந்த காலத்தில், யாக யக்ஞங்களை செய்து மழையை கொண்டு வருபவர்கள் காராளன் என்பார்கள்.. கொங்கு நாட்டில், கவுண்டரில், சில கோத்திரத்தார்களை காராளர் என்று அழைப்பார்கள்.. பெயர் கூட காராளன் என்று வைப்பார்கள்.. நாட்டுக் கவுண்டர் வகையில் இந்த பெயர் இருக்கும் என்று நினைக்கிறேன்..