Monday, October 31, 2011

ஓம் போக பெருமானே போற்றி

ஊதியூர்

ஊதியூர்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------



      ஊதியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்து உள்ள இன்னொரு அமைதியான ஆதி சித்தரின் (முருகர் )திருக்கோயில்.

ஐயனின் சீடருள் ஒருவரான கொங்கன சித்தர் வாசம் செய்த இடமாகும் , நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று , பழனியில் உள்ள தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக கட்சி அளிக்கிறார் ஆதி சித்தர் .

இந்த சிலை கொங்கன சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் , அடியேனுக்கு இதுவும் நவபாஷான சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு . 

அருகில் ஒரு மையில் தொலைவில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . நீண்ட நேரம் தபோ நிஷ்டை கொள்ள ஏற்ற இடம் .
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி
எல்லோருக்கும் அளிப்பதாக கேள்வி , அடியேன் நேரில் கண்டது இல்லை , அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று வாருங்கள் , மன்னிக்கவும் ரசத்தை அருந்தி வாருங்கள் .

கிட்டத்தட்ட மூன்றாவது பயணத்தில் தான் என்னால் இந்த கோயிலுக்குள் செல்லவே முடிந்தது , அவ்வளவு கர்ம வினைபோல எனக்கு , முதல் முறை இங்கு செல்ல நினைத்து , நண்பர் சதுரகிரி பிரபாகரை அழைத்துக்கொண்டு , இருவரும் வெள்ள கோயிலில் இருந்து புறப்பட்டோம் , காங்கேயம் அருகில் சென்று கொண்டு இருந்த பொழுது , நண்பர் திடீர் என்று வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பள்ளத்தில் விட சொன்னார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , சரி என்று பள்ளத்தில் இறக்கி நிறுத்திய பொழுது , எதிரில் ஒரு வயதான நபர் , சிறிது சடை முடியுடனும் , அழுக்கு வேட்டி , சட்டை அணிந்து இருந்தார் , அவரிடம் இரண்டு நபர்கள் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள் , அவரை சுற்றி நிறைய உணவு பொட்டலங்களும் , தண்ணீர் பாட்டில்களும் கிடந்தது , அருகில் சாக்காடை , மனிதர் எதை பற்றியும் கவலை படாமல் பரமானந்தமாக அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டு இருந்தார் , அவரிடம் ஒரு மத்திம வயதுள்ள பெண் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார் .



நான் நண்பர் பிரபாகரை பார்த்து , யார் தலைவரே இவர் , பார்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்று வினவினேன் , நண்பர் அமைதியாக இருக்கவும் , இவரும் ஒரு யோகி என்று அமைதியாக சொல்லிவிட்டு அவரை வணங்க ஆரம்பித்தார் . 

நான் சிறிது நேரம் அவர் அருகில் நின்றுகொண்டு இருந்தேன் , பிறகு ஒரு உந்துதலின் பேரில் அவரின் அருகில் அமர்ந்தேன் , அவர் சாக்கடையில் படுத்துக்கிடந்தாலும் , அவர் மேல் எந்தவிதமான அருவருக்கத்தக்க வாடையும்  வீச வில்லை , அமர்ந்து சிறிது நேரத்தில் சமந்தமே இல்லாமல் சரத்தை பற்றி பேச ஆரம்பித்தார் , என்ன இவர் திடீர் என்று வேறு எதை பற்றியோ பேசுகிறாரே  , என்று யோசிக்க ஆரம்பித்தால் , மேலும் விரலின் உதவிகளால் சுவாசத்தை மாற்ற ஆரம்பித்தார் , இடைகளையில் சுவாசத்தை வைத்துக்கொண்டு , நானும் இப்போது பெண் தான் என்றார் , எனக்கு நன்றாகவே புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று .

சரி இதற்க்கு மேலும் சும்மா உட்கார்ந்து இருப்பது தவறு என்று நினைத்து , அவரிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்தது தான் தாமதம் , அவர் என் தலையில் கை வைத்தார் , அப்பா உடம்பு முழுவதும் ஒரு மிக பெரிய அதிர்வு சில வினாடிகள் , உடம்பு அதிர்ந்து விட்டது , சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டோம் , அவரும் சிறிது நேரம் இரு , சிறிது நேரம் இரு என்று சொல்லிவிட்டு , இருட்டும் வேலையில் விடை கொடுத்து அனுப்பினார் , போகும் பொழுது மீண்டும் அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி பணித்தார் அந்த வாசி யோகி .

இருட்டும் வேலையில் ஊதியுறை நோக்கி மீதம் இருக்கும் இருபது கிலோமீட்டர் தூரத்தை அவசர அவசரமாக கடந்தோம் , நேராக கொங்கன சித்தரின் குகை நோக்கி எங்கள் இருசக்கர வாகனத்தை செலுத்தினோம் , ஓற்றை அடி பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று வண்டியை லாக் செய்து விட்டு , கரடு முரடான மலை பாதையில் ஏற ஆரம்பித்தோம் , சுமார் பதினைந்து நிமிட நடையில் வந்தது கொங்கன சித்தரின்  குகை , குகையை பார்த்தவுடன் ஒரு சிறிய அதிர்ச்சி , காரணம் சதுரகிரியில் அய்யன் போகர் முதல் சித்தரின்  குகை , காலங்கி ஐயாவின் குகை , சுருளியில் உள்ள ஐயனின் குகை மேலும் நான் பார்த்த திருமூலர் வழித்தோன்றல் சித்தர்களின் குகைகள் அனைத்துடனும் இந்த குகையின் தோற்றமும் ஒத்துப்போனது , நன்கு நிசப்தமான ஒரு சூழல் , சுற்றிலும் ஆள் அரவம் இல்லை , அப்படியே அந்த அமைதியான சூழலுக்கு ஏற்ப மனதும் உலகாய விஷயங்களில் இருந்து வெளிவந்து அமைதியான நிலைக்கு சென்றது , குகை உள்ளே சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை வணங்கி சிறிது நேரம் அமர்ந்தோம் , சிறிது நேரத்தில் மனதில் இருந்த அமைதியான சூழலும் மாறி அதற்க்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு பயணப்பட்டது .

கொங்கன சித்தரின் குகை - ஊதியூர்


நண்பர் நேரம் முழுக்க  இருட்டி விட்ட காரணத்தால் என்னை இறங்கும் படி சொன்னார் , ஹ்ம்ம் வேறு வழி இல்லாமல் திரும்பவும் உலக கடமைகளுக்காக  கீழ் இறங்க ஆரம்பித்தோம் . திரும்பும் பொழுது நல்ல மழை , கிட்ட தட்ட ஐந்து , ஆறு மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது , பொதுவாக இதை போன்ற மழைகாலங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு பிடித்த விஷயம் என்பதால் நன்றாக அனுபவிக்க முடிந்தது . ஆனால் ஊதியூர் முருகர் கோயிலை சென்று தரிசிக்க முடியவில்லை , கோயில் துப்புரவாக பூட்டி இருந்தது 

இரண்டாவது நாள் , மீண்டும் இருவரும் சென்றோம் ஊதி அப்பனை தரிசனம் செய்ய , இன்றும் கோயில் பூட்டியே கிடந்தது , கோயிலுக்கு வெளியில் கோடி கம்பத்து அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு மீண்டும் நாளை வருவதாக தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினோம் , இன்றும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது .

மூன்றாவது நாள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் நண்பருக்கு கால் செய்து வரும்படி அழைத்தேன் , அவருக்கு முக்கிய அலுவல் சிலது இருந்ததால் அவரால் வர இயிலவில்லை என்றார் , சரி நாளை செல்லாம் என்று நானும் அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன் , மனம் அதில் முழுமையாக நிலைக்க வில்லை , எதை செய்தாலும் அதை முழுக்க செய்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும் , அதனால் ஊதியுருக்கு செல்ல தீர்மானித்து செல்ல ஆரம்பித்தேன் , மூன்றாவது நாள் , இன்றாவது அவரின் தரிசனம் கிடைக்குமா என்ற கேள்வி மனதில் .

மணி ஒரு ஐந்தரை இருக்கும் , மலை மேல் செல்லும் பொழுது , கோயில் கதவு இன்றும் சாத்தியே இருந்தது , என்ன முருகா இன்னைக்கும் சாத்தி இருக்கு , அவ்ளோ கர்மம் என்ன பிடிச்சு இருக்கானு கேட்டுட்டு கோயில் கதவு கிட்ட போய் பாத்தா பூட்டு போடாம சும்மா சாத்தி இருந்தது , சரி முயற்சி பண்ணி பாப்போம்னு கதவ கொஞ்சம் போல தள்ளினேன் , திறந்தது .










கோயில் , கோயிலை போலவே வெகு சுத்தமாக , மிக மிக அழகாக , சரியான வரையறையுடன் இருந்தது , கைகள் சும்மா இருக்குமா என்ன , ஐயனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு , கைகூப்பி வணங்கி விட்டு போடோக்களை எடுக்க ஆரம்பித்தேன் , பின்னால் அமைதியாக ஒரு உருவம் வந்து நின்றது , யார் என்று திரும்பி பார்த்தால் அந்த கோயில் குருக்கள் , பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றார் , அவ்வளவு அழகான முகம் இந்த ஆதி சித்தருக்கு , மனதை கஷ்டப்பட்டு அவரிடம் செலுத்த தேவை இல்லை , மனம் தானாகவே அவரிடம் லயித்து விடும் அப்படி ஒரு ஈர்ப்பு .

தீபாராதனை காட்டி வணங்கி   விட்டு , குருக்களிடம் பேச ஆரம்பித்தேன் , இந்த கோயில் நன்றாக பராமரிக்கப்படுகிறதே , எத்தனை நபர்கள் இங்கு வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் , அவர் பதில் ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளித்தது , காரணம் அவர் ஒருவர் மட்டுமே அந்த கோயிலை பராமரித்துக்கொண்டு இருக்கிறார் , நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள் நான் ஆச்சரியபட்டதில் எந்த அதிசயமும் இல்லை என்பீர்கள் .

இந்த கோயில் வருமானத்தை நம்பியே அவரின் மொத்த குடும்பமும் உள்ளது என்பது மிக மிக வருத்தத்தில் ஆழ்த்தியது என்னை , காரணம் இங்கு வருகை தரும்  நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே , அவர்களும் தக்ஷனை போடுவார்களா என்பது சொல்லமுடியாது , அவரின் நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினேன் , ஆனால் அவர் மிக மிக சாதரணமாக அழகாக சிரித்துக்கொண்டு , இது சித்தர்கள் வாசம் செய்யும் பூமி , இங்க இப்படி தான் இருக்கும் , நாம கூடம் கூட்டவோ , வருமானத்தையோ எதிர் பார்க்க கூடாது , அவாளுக்கு சேவை செய்றதே பெரிய  பாகியம்னார் பாருங்க , இத என்னனு சொல்றது .
http://bhogarsiddhar.blogspot.com/2011/05/blog-post.html 
ஊதியூர் செட்டிதம்புரன் குகை உங்கள் பார்வைக்கு 

ஓம் சிவ சிவ ஓம் 


ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய்

ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிதாய் உணவு கிடைப்பவனுக்கு பசி என்பது ஒரு சுகமான அனுபவம், உணவுக்கு வழியில்லாதவர்களுக்கு பசி மிகக்கொடிய, உயிரை உருக்கும் நோய்தானே!

சுயநலச் சூறாவளி சுற்றிச் சுற்றி தாக்கினாலும், பொது நலனில் அக்கறை கொண்டு ஆங்காங்கே அர்பணிப்புத் தன்மையோடு ஏதாவது ஒரு வகையில் யாரோ ஒரு சிலர் செய்யும் தியாகங்களே உலகை இன்னும் வாழ்வதற்கு அர்த்தமுள்ளதாக வைத்திருக்கின்றது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.

ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.

கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.

சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.

ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.

எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.







தயாராக இருக்கும் சாப்பாடு பார்சல்


சாப்பாட்டில் சலுகை

நன்கொடை அளித்தவர்களுக்கான நன்றி

திரு. வெங்கட்ராமன்

உணவு பெறும் பயனாளிகள்

உணவு பெறும் பயனாளிகள்



வாசியை பற்றி - கருணாகர சுவாமிகள்

வாசியை பற்றி - கருணாகர சுவாமிகள்


வேதம் பிறந்தது எல்லாம் வாசி ஒன்றை விளக்கவன்ரோ
சேதம் இல்லா வாசியது சமைந்ததுவே அகரமதுள்

நாசியில் சுவாசம் இடும் மனிதனை நம்பாதீர் என்று
இயேசு சொன்ன வசனமிது யாரரிந்து உய்ய வல்லார் ?

வெள்ளிக்காற்றின் உதவியின்றி வாழுகின்ற சித்தர்களும்
களிபுற்று இருக்கின்றனர் ககனம் அதில் காற்றுஇன்றி

கலை பிரள வாசி கற்பம் அறிந்து நாம் பயின்றிடாலோ
நிலை மாறா சுழி அதனில் வாசிலயம் பெற்றிடுமே

வாசிலயம் பெற்றவரே சித்தர்களாம் வையகத்தில்
நாசியில் சுவாசம் ஓடா வெளிகாற்றும் தேவைஇல்லை

வெளிக்காற்று அசுவாசமற்ற சித்தரென்றால் நம்பக்கூடும்
தெளிவப்பட கூறும் இதை அனுபவத்தில் அறிந்திடுவீர்

எட்டுஇரண்டு பதினாறு கலைகள் ஒன்றாய் கட்டிய நீர்
முட்டி நிற்கும் அகரம் அதுள் மூச்சடங்கி வாசியாய்

ஆ என்றால் அசையும் வாசி அக்கேன்றால் அணுவாய் அடங்கும்
ஆஊவும் ஆக்குமே ஆதியந்தம் அக்பர் அதனால்
 

Saturday, October 29, 2011

நபி அடிகள் சல்லலாஹு அலைய்ஹி வசலம் கூறிய இஸ்லாம் போதனையிலிருந்து - கருணாகர சுவாமிகள் சொல்லும் ஞானம்


1)எந்த சமையம் அதுவும் எடுத்துரைக்கா ஆதியந்தம்
 மந்திரத்தை இஸ்லாமே சொல்லால் உரு விளக்கியது

2)அல்லாகூ அக்பர் என்றால் தூல உபதேசமாகும்
 விள்ளவென்றால் அதில்வாழும் சாரசரத்தை உரைக்க வேண்டும்

3)சராசரத்தை பிரித்தோம் என்றால் ஹரிஓம் என்ற அணுசக்தி
சாரசரத்தை பிரித்தொதும் அட்சராப்  பியாசதில்

4)ஆஎன்பது உயிராவி அது வாழும் உடல் உகாரமாகும்
ஆஊவை விளக்கியது இஸ்லாமே அல்லாக்ஹுவென்று

5)அல்லாகு ஆக்பரை விளக்க அவனி சித்தர் அனைவருமே
சொல்லாது சொல்லி வைத்தார் சுருங்க சொல்வோம்  குழந்தைகட்கு

6)ஆஉயிரும் ஊவுடலும் ஒன்றாய் சமைந்துள்ளது என்ன
ஓவியமாய் விளக்கிய சொல் குழந்தைகளும் உணர்வரே

7)இஸ்லாம் என்ற சொல் பொருளே இறைவன் திருஉருவாம்
இஸ்லாமே ஓயாத வாசி ஒடுங்கி நிற்கும் ஈமானால்

8)சந்திரனும் சூரியனும் உயிர் உடலாம் அகர சடம்
விந்து நாதம் என்று உரைப்பார் அட்சரா பியாச்தில்

9)தமிழக சித்தர்களே ஆதிமுதல் தமிழ்மொழிக்கு
 சமய மொழி உயிர் "ஆ" தான தன கரத்துள் அடக்கமேன்றார்

10)எந்தவித மாய் சொல்லி இறைஉருவை விளக்கிடினும் 
 சிந்தையுற்று தொடுக்காட்டா விதை சபைக்கு ஏறாதே

11)தொட்டுக்காட்டும் விதையை போல இஸ்லாமே உயிர்மெய் உணர
விட்டுகொடுத்த சொல் அல்லாகூ அக்பராம்

12)அக்பருள் வாழ் அமுதம் சாகாதே செத்திருக்கும்
பக்குவர் அதை எழுப்ப அல்லா அமு(து) ஊட்டுவாரே

13)அகரசடம் தோண விளக்கியதும் ஆங்கிலம் தான்
அக்பர் சடம் தோண விளக்கியதும்  இஸ்லாமே

14)ஆதியந்தம் அல்லாகூ அக்பர் அதாய் அவதரித்தார்
ஓதியது இஸ்லாமே உத்தமர் தான் நண்குணர

15)ஆறம் பொருள் இன்பம் வீடு அனைத்தும் அருளவல்ல
மறைபொருளின் திரு உருவம் அகர உயிர் அல்லாகூ

16)அல்லாகூ அக்பருள் வாழ் அமுதை பிரித்துகட்ட
சொல்லாத இம்மந்திரத்தை அரிஓம் என்னும் இந்துமதம்

source: http://18siddhar.blogspot.com/

Friday, October 21, 2011

சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

கந்தனின் தந்தையை தான் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாய் அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

ஒன்பது கோள்களுக்கம் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளம் கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்கவைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவைச் சூடிடும் நந்தி தேவா!
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி குஞ்சர முகத்தான்
தந்தை குந்திடும் ரிஷபநந்தி தஞ்சடனாய்
உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.



சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோச காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாதருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி

கெட்ட கனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி

வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்துஅருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிசேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

 

 

பிரதோஷம்

    மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. நம்மை பற்றவிருந்த பாவங்களெல்லாம் ஈசனிடம் உறையும் வேளை. உயிர்பிழைத்த தேவ, அசுரர்கள் இசை வாத்தியமுழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க பரம்பொருள்க்கு நன்றி தெரிவித்த வேளை. இசையாற் பரவசமடைந்த ஈசன் நடேசனாக நர்த்தனமாடிய வேளை. இவ்வாறு கயிலையிற் சகல தேவ, அசுரர்கள் யாவரும் இன்னல் தீர்த்தமை யெண்ணியும் ஆனந்த தாண்டவத்தை கண்டும் மெய்மறந்து சிவனாரைப் பூசித்தப்படியிருக்கும் அத்தகைய சிறப்பிற்குரியதும், சித்தர் பெருமக்களால் சிவவழிபாடுகளில் தலையாயதெனப் போற்றப்படும் பிரதோஷ வழிபாட்டு தோன்றலின் கரணியத்தை யிங்கு காண்போம்.




சிவனார் பேருள்ளம்


    தாயானவள் சேய் செய்யும் பிழையினை கணபொழுதில் மறந்து மன்னிக்கும் குணமுடையராக யிருத்தலியல்பு. தாயுமானாவரோ சகலரர்க்கும் மூலமாதலால் தன் பக்தர்கள் அறிந்தோ, அறியாமலோ, ஆணவமருளினாலோ செய்யுந் தவறினைப் பொருத்து, மன்னித்தருளுவதில் நிகரில்லாதவர். அதனாலன்றோ தாயினுஞ் சாலபரிந்தென்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர்.

    சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. அசுரர்களும், தேவர்களும் பகைவராயினுங் சிவவழிபாட்டினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். இதை வலியுறுத்துவனவாகக் கூறப்படும் பக்திநெறிக் கதைகளுளொன்று வேடுவர் கண்ணப்பரின் கதை.

    வேட்டையாடிய விலங்கின் புலாலை முதலில் தான் சுவைத்துப் பார்த்து, பின் சுவைமிகு துண்டுகளை மட்டும் படையலாக சிவலிங்க ஆவுடையிற் மீது பரப்பியபிறகு எஞ்சியத் துண்டுகளைக் கொண்டு தன் பசியாற்றுவான் கண்ணப்பன். பசுங் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்குங் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை யர்பணித்தக் கொண்டவராக திகழ்ந்தார் பூசர்.

    சாத்திரங் கற்ற பூசரும், வேடுவரும் அடிப்படையிற் இருவேறு துருவங்களையாயினுங் தத்தம் பக்தியில் மெய்யன்புக் கொண்டவர்கள். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட பூசருக்கும், செய்வதறியாமற் செய்யுங் கண்ணப்பனுக்கும் இடையே பக்திப் போரே மூண்டது. பக்திப்போர் முடிவுக்கு வர அருளுள்ளங் கொண்ட சிவனார், பூசரின் கனவிற் தோன்றி, இன்றிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார்.

    சிவனார் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, சிவன் கண்ணில் புண், கண்டுங் காணாமற் யிருக்கலாகுமோ யெனக் கூறி, அம்பின் கூர்முனையாற் தன்கண்ணைக் குற்றிப் பெயர்த்தெடுத்து புண்கண்ணில் பொருத்தினான் கண்ணப்பன். உனக்கின்றி எனக்கேன் யிருக்கண் யென்று மொழிந்தான். மறைந்திருந்த பூசரோ கண்டது கனவோ நனவோயென யறியாமற் திகைத்து நின்றார். இடக்கண்ணி்ற் நிற்கவே வலக்கண்ணி்ற் வழியாரம்பித்தது குருதி. சற்றுஞ் சிந்தியாது வலக்காலை புண்கண்ணிற் மிதியவே, அம்பினாற் வலக்கண்ணேப் பெயர்க்க துணியவே, சிவனார் கண்ணப்பனைத் தடுத்தருளினார்.

    எச்சிலிட்ட புலால் படைத்தல், செருப்பணிக் காலால் மீதித்தல் முதலியன தீச்செயலையாயினுந் தன்னிரு கண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட்ட, இருப்பதனை யிழக்க முனைந்திட்ட துணிவே மெய்பக்தி யென ஏற்றுக்கொண்டு கண்ணப்பரை ஆட்கொண்டுருளினார் சிவனார்.




பாற்கடற் கடையக் கரணியம்


    மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் தேவேந்திரன் வரையிலாக அனைவரும் சிவவழிபாடினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை யிழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென யறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதாற் என்றும் மரணயெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள். பாற்கடலில் பள்ளிகொணடருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார்.





பாற்கடற் கடைதல்


    வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேணாவென்று அடம்பிடித்தது. இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே சேர, தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய யாரம்பித்தனர்.





தேவ அசுர ஆவல்


  1. தீராப் பகையரும் சாவா வரங்கிடைக்குமென ஒன்றுக்கூடி உழைக்கச் செய்ததந்த ஆவல்.
  2. குணத்தாற் மாறுபட்டோரும் வயதேறா மேனிபெற ஒருமித்த எண்ணங் கொடுத்ததந்த ஆவல்.
  3. நா இதுகாருமுணரா சுவையென கொண்டாடி நிற்கசெய்ததந்த ஆவல்.
  4. முக்கனியுந் தேனுஞ் சர்க்கரையுடஞ் சேர்த்துப் பிசைந்தப் பழச்சாறும் வீணெனக் கூறச்செய்ததந்த ஆவல்.
  5. உடற்கூறுபடினும் உயிரெனுஞ் சீவன் உடனுறைய காந்தத்தினைத் தரவல்லவெனப் போற்றச் செய்ததந்த ஆவல்.
  6. அமிழ்தத்தினை அருந்தியவர் உலகயின்பமனைத்தும் சுவைத்தவரென பெருமைக் கொள்ளச் செய்ததந்த ஆவல்.
  7. இவையன்றி பெறுவதற்கு வேறு பேறில்லையென மருளச் செய்ததந்த ஆவல்.





ஆலகாலத் தோன்றல்


    சாகானிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையிற், அவர்க்கெல்லாம் பேரிடியாக கருகருவென விரீயத்துடந் வானலாவ திரண்டு நின்றது ஆலகாலம் எனுந்விடமே. இக்கொடியவிடத்திற் மேலுந் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொருக்க முடியாமற் நஞ்சினை கக்கியது. கிணறு வெட்ட பூதம் கிழம்பினாற் போல், சற்றும் எதிர்பாராமற் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை யெண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

    மரணப்பயங் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படுந் ஒளியினைப் போல்லெழ,சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர். ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளின் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறுந் அந்நெறியினை மறந்த கரணித்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.





தீவினைத் தீர்த்தல்


    மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள் அஞ்சிய “அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!!!” யெனச் சுந்தரரை நோக்கி திருவாய் மொழிந்தார் விரிசடைப் பெருமான். பாரில்வுள்ளோர் பயந்து நடுங்கிய விடத்தினை ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கிட சுந்தரர், “நமச்சிவாய!!! நமச்சிவாய!!! நமச்சிவாய!!!” வென முன்மொழிய, அவையிலிருந்தோர் அதனை வழிமொழிய, அண்ட சராசரங்களும் இறைவனின் அத்திருநாமத்தையே உச்சரித்தவனவாக ஒருமித்த சிந்தனையிற் ஒடுங்க, அக்கொடியவிடமானது வடிவஞ் சிறுத்து உருண்டையானது.

    பிரளயக் காலத்து அக்னியினைப் போன்ற வீரியமிகு விடத்தினை தன்னிருக் கரங்களால் ஏந்திய ஈசன் அவையோரை நோக்க, “ஐயனே!!! ஆலகாலத்திலிருந்து எங்களைக் காக்க உகந்த வழி செய்க” வென தேவ அசுரரனைவரும் வேண்டினர், நடப்பன யெண்ணி மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, அடியவர்கட்கு அடியவராம் சிவனார் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தினை வாயிற்யிட்டு விழுங்கலானார்.

    அம்மாசறுகோனின் அருளை காணுங்கால் பயங்கொண்டவராகத் திகைத்து நின்ற உமையும், பரந்தாமனும், எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

    இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர படைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையிற் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.





பிரதோஷக் காலம்


    இச்சம்பவந் நடக்கின்ற காலநேரத்தே பிரதோஷ காலமென்றனர். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.





பிரதோஷ வகைகள்


  1. நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
  2. பக்ஷப் பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
  3. மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி
  4. மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
  5. பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்





திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்


  1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
  2. பழங்கள் - விளைச்சல் பெருகும்
  3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
  4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
  5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
  6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
  7. எண்ணெய் - சுகவாழ்வு
  8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
  9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  10. தயிர் - பல வளமும் உண்டாகும்
  11. நெய் - முக்தி பேறு கிட்டும்



-- நன்றி தமிழ்ச்சொக்கன்,விக்கிபீடியா.

கருத்து பரிமாற்றம்

 நாகரீகமான சூழலில் அனைவரும் இன்று ஒருவர் கருத்தினை மற்றவர்கள் பெற்றிட எண்ணி சில முறைகளை மனதில் எண்ணி அதனை நல்ல முறையில் பகிர்ந்து கொள்கின்றனர். அது போல் இந்த ஓம் க்ரீம் -கிரி என்ற இந்த பதிவுகளில் தகுந்த லிங்க் விபரங்கள் உடன் நல்ல கருத்துகள் தேவையானவர்கள் கண்களில் படும் வண்ணம் பதிவு செய்ய படுகிறது. வரிசை எண் என்று தனிப்பட்ட முறையில் செய்யாமல் நல்ல பதிவுகள் உங்கள் பார்வைக்கு கிடைத்திட இயற்கை துணையுடன் என்றும் 


 ஒம்சிவசிவ ஒம்
ஓம் நமசிவாய! சிவனாரின் அனுக்ரஹத்தை முன்னிட்டு, இந்த ப்ளாகில் சிவனாரை பற்றி எமக்கு தெரியவந்ததை எமக்கும் எம்மைப்போல் சிவனாரை பற்றி அறியவிரும்புவோருக்கு உதவும் என்ற எண்ணத்தில்


http://www.eegarai.net/t73063-topic#660166

குடிமல்லம் லிங்கம்.

நன்றி: குடிமல்லம் லிங்கம்.- ஆங்கரை கிருஷ்ணன்.
                      avgkrishnan@gmail.com
 உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்
2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
 நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.
 
குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
 தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
 இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
 இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜசோழனால் இக்கோவிலில், விளக்கு எரிக்கவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கிணறு அமைக்கவும் தானம் அளிக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்று மீண்டும் கட்டப்பட்டன என்பதை அறிய முடிகிறது. கருவறையில் மிகவும் அற்புதமான சிவலிங்க வடிவம் வழிபடப் பெறுவதைக் காணலாம்.
 அருகிலுள்ள திருப்பதி மலைத்தொடரில் காணப்படும் மிக மென்மையான சிவப்பு நிற எரிமலைக் கல்லால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லினைப் பளபளப்பாக மெருகேற்றி, மூலஸ்தானத்தில் தரையில் எழுச்சியுற்றுக் காணப்படும் பாறையைக் செவ்வக வடிவில் செதுக்கி, நடுவில் குழிவாகக் குடைந்து பிண்டிகையை (பீடத்தை) உருவாக்கியுள்ளது. லிங்கம் இப்பிண்டிகையில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த லிங்கம் 5 அடி உயரமுள்ளது.
லிங்கம் மேலே சற்று விட்டு 7கோணமாக செதுக்கப்பட்டு, முன்புறப் ப்குதியில் சிவபெருமானின் அழகிய உருவம் செதுக்கப்பட்டுள்ளது.சிவபெருமான் மனித உருவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள். வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது கரத்தில் வாய் குறுகிய குடுவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது தோளின் மீது `பரசு’ எனும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் காணலாம். சிவனது தலை முடியமைப்பு சடையாக இன்றி நீண்ட புரி குழல்களாலான கற்றைகளாக உள்ளது. இக்குழற்  கற்றைகளையே, தலையைச் சுற்றிலும் தலைப்பாகை அணிவது போல் அலங்கதித்துக் கொண்டுள்ளார்.
கன்னக் கதுப்பெலும்புகள் உயர்ந்தும், மூக்கு சற்றே சப்பையாகவும், நெற்றி குறுகலாகவும், கண்கள் சற்றே பிதுங்கியும் அமைந்துள்ளது. கண்கள் சற்றே சரிந்து பார்க்கிறது. இது வேத றியில் “விருபாக்ஷன்” எனும் சிவநாமத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவனின் காதுகள் துளையிடப்பட்டுள்ள வடிகாதுகளாக, தோள்களைத் தொடும் வகையில் தொங்குகின்றன.
அத்துளைகளில் குண்டலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும், முழங்கைக்கு மேலே அங்கதா எனப்படும் அழகிய தோள்வளைகளும் மணிகட்டுக்கு மெலே பல வடிவங்களில் செய்யப் பட்ட ஐந்து ஐந்து வளையலகளும் அணிந்துள்ளார். சிற்பத்தை நுணுக்கமாக நோக்கினால், சிவன்  மிக மெல்லியதான நெய்யப்பட்ட இடையாடைஉடுத்தியுள்ளது தெரியும். ஆயினும் உள்ளுருப்புகள் தெரிவதாக உள்ளது, ஆனால் தினசரி பூஜையில் மேலாடை சார்த்தியே தரிசனம் தரப்படும்.
தலையில் ஜடாபாரமாக முடி அலங்காரம். காதுகளில் பத்ர குண்டலங்கள். மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபஸ்மார புருஷனின் அல்லது அரக்கனின் தோள்கள் மீது தன் கால்களை விரித்து ஊன்றி நிற்கிறார். கூன் விழுந்து குறுகிக் காட்சியளிக்கும்  அபஸ்மார புருஷனோ, தன்னுடைய கால்களுக்கருகில் கைகளை ஊன்றி அமர்ந்துள்ளான். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து, குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தலைமுடி ஜடாமகுடம் போலவும், கழுத்தில் மணிமாலையும் காட்சியளிக்கின்றன. குள்ளமான தடித்த உடலுடன் காணப்படும் இவனுடைய காதுகள் படர்ந்து கூர்மையாகவும் உள்ளது. இருப்பினும் இவனது முகத்தில் ஒருவித இளிப்பு காணப்படுவதால் இவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் எனத் தெரிகிறது.
நின்ற உருவத்திற்கு மேல் சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம். பின்புறம் பட்டையான வடிவமைப்பு காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பொதுவாக அடிப்பகுதியில் ஆவுடையார் காண்பிக்கப் பெறும். இக்கோவிலில், சிவலிங்க வடிவத்தின் சதுரவடிவமான கீழ்பகுதி (பிரம்மபாகம்) வட்டக்கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு `அர்க்கபீடம்’ என்பது பெயர். கருவறையின் மேல் உள்ள விமானத்தின் பின்பகுதி அரைவட்டமாக உள்ளது. இதுவும் லிங்க வடிவமாக காட்சி அளிப்பதால், `லிங்க கீர்த்தி விமானம்’ என அழைக்கின்றனர்.
கருவறையில் வழிபடப்பெறும் சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையான வடிவமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும்போது கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவில் பிற்கால பல்லவர் காலம் முதல் கி.பி., 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அடைந்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆய்வின்போது சிவப்பு வண்ண பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் லிங்கத்தைச் சுற்றி வேலைப்பாடு மிக்க கருங்கற்களால்ஆன வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை `சிலா வேதிகலிங்கம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இங்கு நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த தொல் பொருட்கள், மண் அடுக்குகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது குடிமல்லம் கோவிலில் காணப்படும் சிவனது வடிவம் கி.மு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், மிகவும் தொன்மையான வடிவம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சைவ சமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு.`பாசுபதம்’ தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோவிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு பாசுபத சித்தாந்த வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.
குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். முகம், காதுகள், தோள்கள் ஆகியனவற்றில் மட்டுமின்றி – காதணிகள், கையணிகள், கழுத்து மாலை ஆகிய அணிகலன்களின் வேலைப்பாடு, உடை உடித்தியிருக்கும் பாங்கு குறிப்பாகக் குஞ்சம் போன்ற மடிப்புகள் கால்களுக்கு இடையில் கட்டப்பட்டுருக்கும் விதம் ஆகிய இத்தனை அம்சங்களிலும் இவ்விரு உருவங்களும் ஒரே மாதிரியில் அமைந்துள்ளன. கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.
இக்கோயில் பற்றிய ஒரு அதிசய நிகழ்வு உள்ளூர் மக்கள் கூறுவது: 60 ண்டுகட்கு ஒருமுறை பரசுராமேஷ்வரர் உள்ள கருவறையுள் வெள்ள நீர் நிறைந்து அடுத்த நாள் வடிவது. டிசம்பர்-4, 2005 அன்று நீர் வந்து சில நிமிடங்களில் வடிந்ததாம். 1995ல் இது போல் நிகழ்வு இருந்ததாக உள்ளூரின் பெரியவர்கள் மூலம் அறியலாம். நிலத்தடி நீர் 300அடிக்கு கீழ் இருக்க இது அதிசயம் என் அகழ்வுத்துறையும் ஏற்கிறது.
லிங்கத்தில் உள்ள சிவன் வடிவில் கோடரி எனும் பரசு உள்ளமையால் இவர் பரசுராமேஷ்வரர் எனப்படுகிறார். வேதங்களின் உருத்திரன் எனும்படி வேடனுருவில் சிவனுள்ளதால் வைதிகலிஙம் எனின்றனர். இன்னுமொரு சாரார் கூறும் கதை- தன் தந்தை ஜமதக்னி முனிவர் ணைப்படி தன் தாயைக் கொன்ற பரசுராமர், அப்பாவம் நீங்க இங்கே வந்து தவம் செய்திட, அருகிலுள்ள சுனையில் தினம் ஒரு பூ மட்டும் மலரும், அதற்கு காவலாக சித்திரசேனன் எனும் யக்ஷ்னை நியமித்தார். பிரம்மாவின் பக்தானான சித்திரசேனன் ஒரு நாள் வலில் தானே வேட்டைக்கு பரசுராமர் சென்று இருந்தபோது தானெ மலரைக் கொய்து பூஜை செய்திட, விபரமறிந்த பரசுராமர் போர் தொடுக்க, 14 ண்டுகள் போர் நட்ந்தும் யாருக்கும் வெற்றி இல்லை, சிவபெருமான் இருவரையும் தன்னும் ஏற்றுக் கொண்டார். மூல லிங்கம் -சிவன்; பரசுராமர்- விஷ்ணு அவதாரம், யஷன் பிரம்மாவினம்சம்- எனவே மும்மூர்த்திகளும் உள்ள லிங்கமும் கும்.
லிங்கம் தரையை விட பள்ளத்தில் உள்ளது. தெலுங்கு மொழியில் குடி எனில் கோவில்; பள்ளத்தில் குடி கொண்டுள்ளதால் குடிபள்ளம். கல்வெட்டுகளில் இக்கோவில் விப்பிரமேடு என அழைக்கப்பட்டுள்ளது. சாதவாகனர்களின் காலத்தின் பல பொருட்கள் (வ.கா.1-2 நூற்றாண்டு) புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ளது.
உஜ்ஜயினியில் கிடைத்துள்ள சில தாமிர காசுகள் – வ.கா.மு.3ம் நூற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் இடம் பெற்றுள்ளதாக அறிஞர்கள் காட்டுகின்றனர். மதுரா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பத்தில் முதல் நுற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் போல் செதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் வ.கா.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.



நன்றி : http://ankaraikrishnan.wordpress.com

Wednesday, October 19, 2011

கடன் தொல்லை அகற்றும் மந்திரம் ----கீதையிலே

ஹிந்து மதத்தில் பிரதான இடம் பிடித்துள்ளது பகவத் கீதை. அதே போல் தேவி பாகவதம். முன் கூறிய இரண்டும் எழுநூறு ஸ்லோகங்கள் கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆயினும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அறிய பொக்கிஷங்கள். அதில் ஒரு நல்முத்து உங்கள் பரிசாக இக்கணம் முதல். பெற்றிடுவோம் அந்த நல்முதின் பலனை. கடமையை செய்து பலன் எதிர்பாரதபோதும் அது நமக்கு கிட்டும் கீதை கூறியது போலவே. 
கடன் தொல்லை அகற்றும் மந்திரம் ----கீதையிலே 


தேஷாமஹம் சமுத்தர்த்த ம்ரித்யுத் சம்சார சாகரத்
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேசித சேதஸாம்

யார் எல்லா பொருட்களையும் என்னிடம் அர்பணித்து எனனை குறிக்கோளாக கொண்டு மற்றொன்றை நினக்காத யோகத்தினால் எனனை த்யானம் செய்து உபாசிக்கிரர்களோ  அப்படி என்னிடம் மனதை புகுத்திய அத்தகையவர்களை ஜனன மரண சம்சார சாகரத்தில் இருந்து உடனே கரை சேர்த்து விடுவேன்.  ஸ்ரீ கிருஷ்ணனின் வெளிப்படை ஆனஉறுதிமொழி அளிக்கிறார். மேற்படி மந்திரத்தை அதிகாலை 1500 முறை மற்றும் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பின் 1500  முறை இவ்வாறு தினமும் மனம் ஒன்றி 54  நாட்களுக்கு அதாவது ஒரு லக்ஷது ஐம்பதாயிரம்  முறை ஜெபிக்கும் பொழுது  இது உங்கள் வாழ்வில் வியத்தகு மாற்றம் ஏற்படுவதை கண்கூடாக அவரவர் உணர முடியும்.

கடனுக்கு மட்டும் தான் தீர்வா கீதையில் என்று எண்ணுபவர்கள் நன்கு பொருள் உணர்ந்து அதனை தெளிவுற தேடினால் விலை மதிப்பற்ற ரத்தினங்கள் அடையலாம்.



Tuesday, October 18, 2011

தொலைந்து போன பொருட்கள் மற்றும் மாந்தர்கள் கிடைக்க

தொலைந்து போன பொருட்கள் மற்றும் மாந்தர்கள் கிடைக்க அற்புத மந்திரம் உங்கள் பார்வை மற்றும் சோதனை செய்து பார்க்க


எழுத்திற்கு உண்டான தேவதைகள்





 

Monday, October 17, 2011

தரிசனம் செய்ய வேண்டிய கோயில்

நரசிம்ஹர் அருள் பெற்றிட ஒரு முறை அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில் ---மைசூர் ஜெயலக்ஷ்மிபுரம் காளிதாசாரோடு , செகண்ட் கிராஸ் கட் ஸ்ட்ரீட்  மைசூர்
ஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஸ்தலம் -- இருபத்து நாலு மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கும் நெய் விளக்கு பிரசித்தம். இங்கு நெய் விளக்கு ஏற்றினால் நோய் வறுமை கடன் பிரச்சினை குடும்பத்தில் குழப்பம் தற்போது நாம் அனுபவிக்கும் துயரங்கள் மற்றும் முன் ஜன்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் நீங்கும்.  குறிப்பாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். 
" சுவாதி நக்ஷத்றது அன்று ஸ்ரீ சுதர்சன ஹோமம் 108  லிட்டர் பால் , 48 லிட்டர் தயிர் , 48 லிட்டர் இளநீர், 4 கிலோ 800 கிராம் {சந்தனம், நெய்,தேன், மஞ்சள், சர்க்கரை, } ஆகியவை கொண்டு 'சுவாமிக்கு' அபிஷேகம் நடைபெறும்.  கோசாலையில்  தற்போது 29 பசுக்கள் உள்ளது. 

மே மாதம் நரசிம்ஹா ஜெயந்தி





Sunday, October 16, 2011

மறைமலை அடிகள், கண்நையாஹ் யோகி , பிரபஹகர யோகி, சூரத்குமார் யோகி, திருவண்ணாமலை யோகிகள் பற்றிய விபரங்களும் அவர்கள் நூல்கள் பற்றிய தகவல் அறிந்த நபர்கள் பகிர்ந்துகொள்ளலாம்

ஒம் சிவ சிவ ஒம் 
மிஸ்டிக் செல்வம் அவர்கள் புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்.




கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங்கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந்தார். உழைத்து உழைத்தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்துநிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறு புன்னகை. இதுதான் சிவதாத்தா.
சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமான தோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லை காவல்தெய்வமான அவன் அனுமதியின்றி கிரமத்திற்குள் யாரும் நுழைய முடியாது. சிவதாத்தா அவனை வணங்கிவிட்டு, சாம்பலை எடுத்துப் பூசினார்.
இனி இந்த கிராமத்தில் தான் வேலை என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அருகில் யாரேனும் தென்படுகின்றார்களா என பார்வையை செலுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பரமனைக் கண்டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைக்களானார். அவருடைய வருகையை கவணித்த பரமன், அவரிடம் ஓடினான்.
“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல்லிமலையில் இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.
“ஐயா ஆடுகள் மேய்கிறதே, அவைகளை விட்டுவிட்டு எப்படி வருவது”
“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வா என்னுடன் ” என்று சொல்ல, பரமனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அவன் சிவதாத்தாவை முதலாளியிடம் கூட்டிச் சென்றான்.
கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்ற வந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவரை மக்கள் தடுத்தனர்.
“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள் செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். ” என்றார் சிவதாத்தா.
“சித்தரே, அவனுக்கு இதயமே இல்லை. அவனைக் காப்பாற்றி எங்களுக்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என்றார் கூட்டத்திலிருந்த ஒரு முதியவர்.
“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்துவிட்டான். அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன். நோயுற்றிருப்பது ஒரு உயிர் என்பதை மறந்து, நீங்களும் பாவத்தினை சேர்த்துக் கொள்ளாதார்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும் அமைதியாக வழிவிட்டார்கள்.
முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம் முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில் புரியவில்லை. கொல்லிமலையிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடனே, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்களைப் பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய் கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்து காப்பாற்ற வேண்டும் ” என மன்றாடினாள்.
“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமை உன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்தனை துன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுகலிருந்தே கிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளியின் அறைக்கு சென்றார்.
“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாக இருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீ நடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள். அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின்றாய்!”
முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு, அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம்பலாக போயிருக்க வேண்டியவன். இனிப் போகப் போகிறவன். வாழும் குறைந்த நாட்களிலாவது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லி வெளியேறினார்.

நடராசரின் மாற்றிடம்

ஆலப்புழை , அம்பலப்புழை !!! நடராசரின் மாற்றிடம் ===விபரங்கள் 

சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.
இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.