ஹிந்து மதத்தில் பிரதான இடம் பிடித்துள்ளது பகவத் கீதை. அதே போல் தேவி பாகவதம். முன் கூறிய இரண்டும் எழுநூறு ஸ்லோகங்கள் கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆயினும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அறிய பொக்கிஷங்கள். அதில் ஒரு நல்முத்து உங்கள் பரிசாக இக்கணம் முதல். பெற்றிடுவோம் அந்த நல்முதின் பலனை. கடமையை செய்து பலன் எதிர்பாரதபோதும் அது நமக்கு கிட்டும் கீதை கூறியது போலவே.
கடன் தொல்லை அகற்றும் மந்திரம் ----கீதையிலே
தேஷாமஹம் சமுத்தர்த்த ம்ரித்யுத் சம்சார சாகரத்
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேசித சேதஸாம்
யார் எல்லா பொருட்களையும் என்னிடம் அர்பணித்து எனனை குறிக்கோளாக கொண்டு மற்றொன்றை நினக்காத யோகத்தினால் எனனை த்யானம் செய்து உபாசிக்கிரர்களோ அப்படி என்னிடம் மனதை புகுத்திய அத்தகையவர்களை ஜனன மரண சம்சார சாகரத்தில் இருந்து உடனே கரை சேர்த்து விடுவேன். ஸ்ரீ கிருஷ்ணனின் வெளிப்படை ஆனஉறுதிமொழி அளிக்கிறார். மேற்படி மந்திரத்தை அதிகாலை 1500 முறை மற்றும் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பின் 1500 முறை இவ்வாறு தினமும் மனம் ஒன்றி 54 நாட்களுக்கு அதாவது ஒரு லக்ஷது ஐம்பதாயிரம் முறை ஜெபிக்கும் பொழுது இது உங்கள் வாழ்வில் வியத்தகு மாற்றம் ஏற்படுவதை கண்கூடாக அவரவர் உணர முடியும்.
கடனுக்கு மட்டும் தான் தீர்வா கீதையில் என்று எண்ணுபவர்கள் நன்கு பொருள் உணர்ந்து அதனை தெளிவுற தேடினால் விலை மதிப்பற்ற ரத்தினங்கள் அடையலாம்.
No comments:
Post a Comment