ஊதியூர்
ஊதியூர்
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஊதியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்து உள்ள இன்னொரு அமைதியான ஆதி சித்தரின் (முருகர் )திருக்கோயில்.
ஐயனின் சீடருள் ஒருவரான கொங்கன
சித்தர் வாசம் செய்த இடமாகும் , நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று
, பழனியில் உள்ள தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக
கட்சி அளிக்கிறார் ஆதி சித்தர் .
இந்த சிலை கொங்கன சித்தரால்
வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் , அடியேனுக்கு இதுவும் நவபாஷான
சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு .
அருகில் ஒரு மையில் தொலைவில் கொங்கன
சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட
லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . நீண்ட நேரம் தபோ
நிஷ்டை கொள்ள ஏற்ற இடம் .
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி
எல்லோருக்கும்
அளிப்பதாக கேள்வி , அடியேன் நேரில் கண்டது இல்லை , அன்பர்களுக்கு இது ஒரு
நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று வாருங்கள் , மன்னிக்கவும்
ரசத்தை அருந்தி வாருங்கள் .
கிட்டத்தட்ட மூன்றாவது பயணத்தில்
தான் என்னால் இந்த கோயிலுக்குள் செல்லவே முடிந்தது , அவ்வளவு கர்ம வினைபோல
எனக்கு , முதல் முறை இங்கு செல்ல நினைத்து , நண்பர் சதுரகிரி பிரபாகரை
அழைத்துக்கொண்டு , இருவரும் வெள்ள கோயிலில் இருந்து புறப்பட்டோம் ,
காங்கேயம் அருகில் சென்று கொண்டு இருந்த பொழுது , நண்பர் திடீர் என்று
வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பள்ளத்தில் விட சொன்னார் , எனக்கு ஒன்றும்
புரியவில்லை , சரி என்று பள்ளத்தில் இறக்கி நிறுத்திய பொழுது , எதிரில் ஒரு
வயதான நபர் , சிறிது சடை முடியுடனும் , அழுக்கு வேட்டி , சட்டை அணிந்து
இருந்தார் , அவரிடம் இரண்டு நபர்கள் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள் ,
அவரை சுற்றி நிறைய உணவு பொட்டலங்களும் , தண்ணீர் பாட்டில்களும் கிடந்தது ,
அருகில் சாக்காடை , மனிதர் எதை பற்றியும் கவலை படாமல் பரமானந்தமாக
அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டு இருந்தார் , அவரிடம் ஒரு மத்திம வயதுள்ள
பெண் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்டுக்கொண்டு
இருந்தார் .
நான் நண்பர் பிரபாகரை பார்த்து ,
யார் தலைவரே இவர் , பார்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்று வினவினேன்
, நண்பர் அமைதியாக இருக்கவும் , இவரும் ஒரு யோகி என்று அமைதியாக
சொல்லிவிட்டு அவரை வணங்க ஆரம்பித்தார் .
நான் சிறிது நேரம் அவர் அருகில்
நின்றுகொண்டு இருந்தேன் , பிறகு ஒரு உந்துதலின் பேரில் அவரின் அருகில்
அமர்ந்தேன் , அவர் சாக்கடையில் படுத்துக்கிடந்தாலும் , அவர் மேல்
எந்தவிதமான அருவருக்கத்தக்க வாடையும் வீச வில்லை , அமர்ந்து சிறிது
நேரத்தில் சமந்தமே இல்லாமல் சரத்தை பற்றி பேச ஆரம்பித்தார் , என்ன இவர்
திடீர் என்று வேறு எதை பற்றியோ பேசுகிறாரே , என்று யோசிக்க ஆரம்பித்தால் ,
மேலும் விரலின் உதவிகளால் சுவாசத்தை மாற்ற ஆரம்பித்தார் , இடைகளையில்
சுவாசத்தை வைத்துக்கொண்டு , நானும் இப்போது பெண் தான் என்றார் , எனக்கு
நன்றாகவே புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று .
சரி இதற்க்கு மேலும் சும்மா
உட்கார்ந்து இருப்பது தவறு என்று நினைத்து , அவரிடம் ஆசீர்வாதம் வாங்க
குனிந்தது தான் தாமதம் , அவர் என் தலையில் கை வைத்தார் , அப்பா உடம்பு
முழுவதும் ஒரு மிக பெரிய அதிர்வு சில வினாடிகள் , உடம்பு அதிர்ந்து விட்டது
, சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு செல்ல
அனுமதி கேட்டோம் , அவரும் சிறிது நேரம் இரு , சிறிது நேரம் இரு என்று
சொல்லிவிட்டு , இருட்டும் வேலையில் விடை கொடுத்து அனுப்பினார் , போகும்
பொழுது மீண்டும் அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி பணித்தார் அந்த வாசி
யோகி .
இருட்டும் வேலையில் ஊதியுறை நோக்கி
மீதம் இருக்கும் இருபது கிலோமீட்டர் தூரத்தை அவசர அவசரமாக கடந்தோம் , நேராக
கொங்கன சித்தரின் குகை நோக்கி எங்கள் இருசக்கர வாகனத்தை செலுத்தினோம் ,
ஓற்றை அடி பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று
வண்டியை லாக் செய்து விட்டு , கரடு முரடான மலை பாதையில் ஏற ஆரம்பித்தோம் ,
சுமார் பதினைந்து நிமிட நடையில் வந்தது கொங்கன சித்தரின் குகை , குகையை
பார்த்தவுடன் ஒரு சிறிய அதிர்ச்சி , காரணம் சதுரகிரியில் அய்யன் போகர்
முதல் சித்தரின் குகை , காலங்கி ஐயாவின் குகை , சுருளியில் உள்ள ஐயனின்
குகை மேலும் நான் பார்த்த திருமூலர் வழித்தோன்றல் சித்தர்களின் குகைகள்
அனைத்துடனும் இந்த குகையின் தோற்றமும் ஒத்துப்போனது , நன்கு நிசப்தமான ஒரு
சூழல் , சுற்றிலும் ஆள் அரவம் இல்லை , அப்படியே அந்த அமைதியான சூழலுக்கு
ஏற்ப மனதும் உலகாய விஷயங்களில் இருந்து வெளிவந்து அமைதியான நிலைக்கு
சென்றது , குகை உள்ளே சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை வணங்கி சிறிது
நேரம் அமர்ந்தோம் , சிறிது நேரத்தில் மனதில் இருந்த அமைதியான சூழலும் மாறி
அதற்க்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு பயணப்பட்டது .
கொங்கன சித்தரின் குகை - ஊதியூர் |
நண்பர் நேரம் முழுக்க
இருட்டி விட்ட காரணத்தால் என்னை இறங்கும் படி சொன்னார் , ஹ்ம்ம் வேறு வழி
இல்லாமல் திரும்பவும் உலக கடமைகளுக்காக கீழ் இறங்க ஆரம்பித்தோம் .
திரும்பும் பொழுது நல்ல மழை , கிட்ட தட்ட ஐந்து , ஆறு மணி நேரம் விடாமல்
மழை பெய்து கொண்டு இருந்தது , பொதுவாக இதை போன்ற மழைகாலங்களில் ஹெல்மெட்
அணிந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு பிடித்த விஷயம்
என்பதால் நன்றாக அனுபவிக்க முடிந்தது . ஆனால் ஊதியூர் முருகர் கோயிலை
சென்று தரிசிக்க முடியவில்லை , கோயில் துப்புரவாக பூட்டி இருந்தது
இரண்டாவது நாள் , மீண்டும் இருவரும்
சென்றோம் ஊதி அப்பனை தரிசனம் செய்ய , இன்றும் கோயில் பூட்டியே கிடந்தது ,
கோயிலுக்கு வெளியில் கோடி கம்பத்து அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து
விட்டு மீண்டும் நாளை வருவதாக தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினோம் ,
இன்றும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது .
மூன்றாவது நாள் வீட்டில் இருந்து
கிளம்பும் முன் நண்பருக்கு கால் செய்து வரும்படி அழைத்தேன் , அவருக்கு
முக்கிய அலுவல் சிலது இருந்ததால் அவரால் வர இயிலவில்லை என்றார் , சரி நாளை
செல்லாம் என்று நானும் அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன் , மனம்
அதில் முழுமையாக நிலைக்க வில்லை , எதை செய்தாலும் அதை முழுக்க செய்தால்
தான் எனக்கு திருப்தியாக இருக்கும் , அதனால் ஊதியுருக்கு செல்ல
தீர்மானித்து செல்ல ஆரம்பித்தேன் , மூன்றாவது நாள் , இன்றாவது அவரின்
தரிசனம் கிடைக்குமா என்ற கேள்வி மனதில் .
மணி ஒரு ஐந்தரை இருக்கும் , மலை மேல்
செல்லும் பொழுது , கோயில் கதவு இன்றும் சாத்தியே இருந்தது , என்ன முருகா
இன்னைக்கும் சாத்தி இருக்கு , அவ்ளோ கர்மம் என்ன பிடிச்சு இருக்கானு
கேட்டுட்டு கோயில் கதவு கிட்ட போய் பாத்தா பூட்டு போடாம சும்மா சாத்தி
இருந்தது , சரி முயற்சி பண்ணி பாப்போம்னு கதவ கொஞ்சம் போல தள்ளினேன் ,
திறந்தது .
கோயில் , கோயிலை போலவே வெகு சுத்தமாக
, மிக மிக அழகாக , சரியான வரையறையுடன் இருந்தது , கைகள் சும்மா இருக்குமா
என்ன , ஐயனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு , கைகூப்பி வணங்கி விட்டு போடோக்களை
எடுக்க ஆரம்பித்தேன் , பின்னால் அமைதியாக ஒரு உருவம் வந்து நின்றது , யார்
என்று திரும்பி பார்த்தால் அந்த கோயில் குருக்கள் , பரஸ்பரம்
அறிமுகத்திற்கு பிறகு அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றார் , அவ்வளவு
அழகான முகம் இந்த ஆதி சித்தருக்கு , மனதை கஷ்டப்பட்டு அவரிடம் செலுத்த தேவை
இல்லை , மனம் தானாகவே அவரிடம் லயித்து விடும் அப்படி ஒரு ஈர்ப்பு .
தீபாராதனை காட்டி வணங்கி விட்டு ,
குருக்களிடம் பேச ஆரம்பித்தேன் , இந்த கோயில் நன்றாக பராமரிக்கப்படுகிறதே ,
எத்தனை நபர்கள் இங்கு வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் , அவர் பதில்
ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளித்தது , காரணம் அவர் ஒருவர் மட்டுமே அந்த
கோயிலை பராமரித்துக்கொண்டு இருக்கிறார் , நீங்களும் ஒருமுறை சென்று
பாருங்கள் நான் ஆச்சரியபட்டதில் எந்த அதிசயமும் இல்லை என்பீர்கள் .
இந்த கோயில் வருமானத்தை நம்பியே
அவரின் மொத்த குடும்பமும் உள்ளது என்பது மிக மிக வருத்தத்தில் ஆழ்த்தியது
என்னை , காரணம் இங்கு வருகை தரும் நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு பேர் மட்டுமே , அவர்களும் தக்ஷனை போடுவார்களா என்பது சொல்லமுடியாது ,
அவரின் நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினேன் , ஆனால் அவர் மிக
மிக சாதரணமாக அழகாக சிரித்துக்கொண்டு , இது சித்தர்கள் வாசம் செய்யும்
பூமி , இங்க இப்படி தான் இருக்கும் , நாம கூடம் கூட்டவோ , வருமானத்தையோ
எதிர் பார்க்க கூடாது , அவாளுக்கு சேவை செய்றதே பெரிய பாகியம்னார் பாருங்க
, இத என்னனு சொல்றது .
http://bhogarsiddhar.blogspot.com/2011/05/blog-post.html
ஊதியூர் செட்டிதம்புரன் குகை உங்கள் பார்வைக்கு
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment