1)எந்த சமையம் அதுவும் எடுத்துரைக்கா ஆதியந்தம்
மந்திரத்தை இஸ்லாமே சொல்லால் உரு விளக்கியது
2)அல்லாகூ அக்பர் என்றால் தூல உபதேசமாகும்
விள்ளவென்றால் அதில்வாழும் சாரசரத்தை உரைக்க வேண்டும்
3)சராசரத்தை பிரித்தோம் என்றால் ஹரிஓம் என்ற அணுசக்தி
சாரசரத்தை பிரித்தொதும் அட்சராப் பியாசதில்
4)ஆஎன்பது உயிராவி அது வாழும் உடல் உகாரமாகும்
ஆஊவை விளக்கியது இஸ்லாமே அல்லாக்ஹுவென்று
5)அல்லாகு ஆக்பரை விளக்க அவனி சித்தர் அனைவருமே
சொல்லாது சொல்லி வைத்தார் சுருங்க சொல்வோம் குழந்தைகட்கு
6)ஆஉயிரும் ஊவுடலும் ஒன்றாய் சமைந்துள்ளது என்ன
ஓவியமாய் விளக்கிய சொல் குழந்தைகளும் உணர்வரே
7)இஸ்லாம் என்ற சொல் பொருளே இறைவன் திருஉருவாம்
இஸ்லாமே ஓயாத வாசி ஒடுங்கி நிற்கும் ஈமானால்
8)சந்திரனும் சூரியனும் உயிர் உடலாம் அகர சடம்
விந்து நாதம் என்று உரைப்பார் அட்சரா பியாச்தில்
9)தமிழக சித்தர்களே ஆதிமுதல் தமிழ்மொழிக்கு
சமய மொழி உயிர் "ஆ" தான தன கரத்துள் அடக்கமேன்றார்
10)எந்தவித மாய் சொல்லி இறைஉருவை விளக்கிடினும்
சிந்தையுற்று தொடுக்காட்டா விதை சபைக்கு ஏறாதே
11)தொட்டுக்காட்டும் விதையை போல இஸ்லாமே உயிர்மெய் உணர
விட்டுகொடுத்த சொல் அல்லாகூ அக்பராம்
12)அக்பருள் வாழ் அமுதம் சாகாதே செத்திருக்கும் விட்டுகொடுத்த சொல் அல்லாகூ அக்பராம்
பக்குவர் அதை எழுப்ப அல்லா அமு(து) ஊட்டுவாரே
13)அகரசடம் தோண விளக்கியதும் ஆங்கிலம் தான்
அக்பர் சடம் தோண விளக்கியதும் இஸ்லாமே
14)ஆதியந்தம் அல்லாகூ அக்பர் அதாய் அவதரித்தார்
ஓதியது இஸ்லாமே உத்தமர் தான் நண்குணர
15)ஆறம் பொருள் இன்பம் வீடு அனைத்தும் அருளவல்ல
மறைபொருளின் திரு உருவம் அகர உயிர் அல்லாகூ
16)அல்லாகூ அக்பருள் வாழ் அமுதை பிரித்துகட்ட
சொல்லாத இம்மந்திரத்தை அரிஓம் என்னும் இந்துமதம்
source: http://18siddhar.blogspot.com/
No comments:
Post a Comment