Saturday, November 5, 2011

அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.

கண், மூக்கு, செவி, வாய், உடல் தோல் ஆகிய ஐம்பொறிகட்குப்புலப்படும் பொருள்களையே ப்ரிதியுடன் நினைப்பது, நினைந்து உருகுவது மனித இயல்பு. இவற்றினூடே பெறப்படும் இன்பம் வெள்ளிடைமலை. அனுபவ சாத்தியம்.

"பொறிவாயிற் ஐந்தவித்தான்" கண்ணுக்கும் மனத்திற்கும் எளிதல் எட்ட இயலாதவன். ஆதலின் அவன்பால் உய்த்திடும் இன்பம் மனித அனுபவத்தில் அரிது. ஆதலின் இறைவனிடத்தே ப்ரீதியை அவ்வுணர்வை உத்வேகத்துடன் எழச்செய்தல் அவசியமாகிறது. இறையே நம்முள் கிடக்கிறது எனினும் இறைவனிடத்துப்பிரீதி செய்தல் மானிட இயல்பு. எனினும் மனத்தினுள்ளே மறைந்திருக்கும் மாயையின் செயலால் அவ்வியல்பு மறைந்து கிடக்கிறது.


அந்த மாயையை அழுக்கை நீக்க ஒன்பது வகையான ரீதிகளைச் சாத்திரங்கள் படைத்துள்ளன. நாமறியாமலே நம்மீது
ப்ரீதீ கோண்டவன் நமக்கு எல்லா நன்மைகளையும் எப்போதும் என்னிலையிலும் மறைந்து நின்று செய்து வருகிறான்.
அத்தன்மையான் ஒருவனிடம் நமக்குப் ப்ரீதி உண்டாக வேண்டுமாயின் முதற்கண் அவனது பெருமையையும் குணங்களையும்
அவைகளை விளக்கும் செயல்களையும் பற்றித் தெரிந்தவர்கள் வாயிலாக கேட்கவேண்டும்.
இது ச்ரவணம்.

பின் அவன் குணாதிசயங்களை சுருங்க விளக்கும் நாமங்களை வாய்விட்டு உரைத்தல் வேண்டும் .
இது கீர்த்தனம்.

இந்நாமங்கள் உணர்த்தும் அவனது பெருமைகளை உள்ளன்புடன் நினைக்கவேண்டும்.
இது ஸ்மரணம்.

ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் நித்தம் செய்பவன் ஒருவனுக்கு, " அவன் உளன் " எனும் நம்பிக்கை தானாக உறுதிப்படும்.
அவனைத் தனக்குப் பிடித்த உருவில் சமைக்கிறான். "அவனைச்" சிந்திக்கையில் அவ்வுரு காணப்படுதல் ஸ்வபாவமாகிறது.
"அவனது " திருவடிக்கு சிறு தொண்டு செய்ய அவா மனதின்கண் தோன்றுகிறது.
இது பாத சேவனம்.

" அவனது " உருவை நீர் மாலை முதலியவற்றால் பூஜிக்கத்தோன்றும்.
இது அர்ச்சனம்.

வழிபாடு முடிவடைகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறான்.
இது வந்தனம்.

ஆக, பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம் ஆகியவை வலுக்க அவ்வுருவுடன் நெருங்கிப் பழகி, " அவனைத் " தனது
எஜமானனாக பாவிக்கும் தருணம். நான் " அவனது " அடிமை எனத்தோன்றும்.
இது தாஸ்யம்.

உறவு முற்றுகிறது. எஜமானன் மீது ப்ரீதி வலுவடைகிறது. " அவனை" நமக்கு ஒரு பெருந்தோழனாகக் கருதும் நிலை.
இது " ஸாக்யம்"

இ ந் நிலை வந்தபின் நாம் செய்யும் செயல்கள் யாவும் அவன் பொருட்டே என்று இறைவனுக்கு உரிமையாகுமாறு
அவனிடத்து எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறோம்.
இது ஆத்ம நிவேதனம்.
ஆக, ச்ரவணம் முதல் ஆத்ம நிவேதனம் வரை சொல்லப்பட்ட ஒன்பது தகுதிகளும் நிலைகளும் இறையிடத்து
நிலையான பக்தியைப் பெற வழி வகுக்கும் ஆரம்பப் படிகளாம். 

http://www.musicdesi.com/soothing/online.html


Courtesy: http://pureaanmeekam.blogspot.com/

No comments:

Post a Comment