அன்பே சிவம்!
கோபம் வரும்போது மூளையை விட நாக்கு வேகமாக வேலை செய்கிறது
நேற்று நடந்ததை மாற்ற இயலாது ஆனால்
இன்று நடப்பதைக் கெடுத்துக் கொள்ளலாம்
நாளையைப் பற்றிக் கவலைப் பட்டு.
அன்பு செய்;அன்பு செய்யப் படுவாய்.
கடவுள் சிறந்ததையே தருகிறார் ---
தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் அளிப்போருக்கு.
புன்னகைக்கு மொழியில்லை.
அனைவரும் அன்பு செலுத்தப்படுவதை விரும்புகிறார்கள்
குறிப்பாக அதற்குத் தகுதியில்லாத நேரத்தில்.
அனைவரும் அழகுதான் ஆனால்
பலருக்கு அது தெரிவதில்லை.
சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்
உள்ளத்தை உடைக்கின்றன.
எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.
No comments:
Post a Comment