Saturday, December 10, 2011

Guru's Transalation of Nirathisaiananda's Words







குருவின் பொன் மொழிகள்



தில்லையில் நடனமிடும் கூத்தனே
எந்தன் அம்பலத்தில் எப்போது
ஆட போகின்றாய்
நான் வழிமேல் விழி வைத்து
காத்து இருக்கின்றேன்
நான் கரைந்த பின் தான் வருவாயா



என்னை பெற்ற அன்னைக்கு தெரியவில்லை
என்னை வளர்த்த தந்தைக்கும் தெரியவில்லை
எனக்கு தொட்டு காட்டிய ஆசானுக்கும் தெரியவில்லை
என்னை பற்றி யாரிடம் போய் இயம்புவேன்

ஊனுக்குள் உறவாய் இருப்பவனே
பூவுக்குள் தேனாய் இருப்பவனே
நாதத்தில் ஒலியாய் இருப்பவனே
உன்னை எங்ஙனம் விளிப்பேன்



(உரைகல்)
நீ இருக்கும் வரை
நான் இருக்கின்றேன்
நீ சென்றதும் நான் இல்லாமல்
இருக்கின்றேன்



அவன்
மறைந்தும் வெளிபடுத்துகின்றான்
வெளிபடுத்தும் போது மறைந்துவிடுகின்றான்



தோன்றி மறையும் இவ்வுலகில்
தோற்றமும் முடிவும் இல்லாதவனுக்கு என்ன வேலை



ஞானம்
1 ஞானம் என்ற விடுதலையை அடைய நான் செய்த முயற்சிகள் எத்தனை!
2 ஞானம் என்ற ஆன்ம ருசியை அடைய நான் இழந்த இழப்புகள் எத்தனை!
3 ஞானம் என்ற இறைவனை அடையும் நிலையை அடைய நான் உடலை வருத்திய துயரங்கள் எத்தனை!
4 ஞானம் என்ற ஞானியின் வசிப்பிடத்தை அடைய நான் இயற்றிய அருந்தவங்கள் எத்தனை!
5 ஞானம் என்ற வேள்வியில் 'என்னையே' புடம் போட்டு அழிவில்லா நிலையை அடைவதற்கு மகான்களிடம் நான் பெற்ற அருட்பிச்சை எத்தனை!



ஞானிகள்
ஞானிகள் இருந்த போது இல்லாமல் இருக்கின்றார்கள். இல்லாத போது எங்கும் நிறைந்து இருக்கின்றார்கள்.



கடவுள்
கடந்து உள்ளே சென்றால் இறைவனை காணலாம்.



குருவின் பொன் மொழிகள்
தியானம் என்னும் தீயில் என்னையே பொசுக்கி
அது மட்டும் தனியாக நிற்கிறதே இது என்ன வேள்வி



ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அலியும் இல்லை
நானும் இல்லை நீயும் இல்லை இது எதில் சேர்த்தி



தான் தானாய் தன்னுள் தனித்திருப்பது தவம்

உன்னுள் உணர்வாய் உறையும் உத்தமனை உணர்

அவன் அவனை அவனுள் அவனியில் அமர்ந்திருப்பது அருந்தவம்

என்னை எனக்குள் எடுத்துக்காட்டிய என்தேவனுக்கு என் வணக்கம்



Guru's Transalation of Nirathisaiananda's Words
பார்க்காமல் பார்ப்பவனை பார்க்க பார்க்க பார்க்காமல் பார்ப்பவனும் பார்க்கப் படுவானே



அன்பு
அன்பு எனப்படுவது யாதெனில்
அன்பாயிருப்பது அன்பு
அன்பே சிவம் என்பர் சித்தர்
அன்பே அறிவு என்பர் பெரியவர்
அன்பே கடவுள் என்பர் ஞானி
அருந்தவம் இயற்றியவரின் ஆற்றல்
அன்பாக மாறும் மகிமையை உணர்வர்
அன்பை அறியாதவர் அரை மனிதர்
அன்பாயில்லாதவர் ஆன்மாவற்றவர்



பதி, பசு, பாசம்
பதி பசு பாசம் என்னும்
மாயையை விலக்கி நின்றால்
நான் என்னும் ஆதி அந்தமற்ற
இறை என்னும் உணர்வை
உன்னுள் உணர்வா

No comments:

Post a Comment