"பிடிக்கப் பிடிக்க
  சறுக்குகின்றது
  ஏறிய இடத்திலாயினும்
  இறங்கலாமென்றால்
  வழுக்கிச் செல்கிறது சரிவு.
  ஏறிய இடம் எது...?" (இறக்கம்)
"கூடவே
  ஒத்திப் பறிபட்ட
  பச்சை இலைகள்
  தளிர்கள்
  கொழுந்துகள்...
  எது எந்த மரத்தினது...?
  அள்ளுண்டவை அறியுமே'
  எற்றுண்ட தம் நிலைபற்றி...! (அறிதல்)
"காற்று கொணரும்
இம் மொழிக் கரைசலினுள்
விரவிக்கிடக்கும் சோகப் பகிர்வு
மோதல் குரோதம் எள்ளல் இகழ்ச்சி
களைந்த துயரம்
பிணையப்பட்ட கட்டுமரமென
மூங்கில் குழல் கட்டு
வடிக்கும் இசைநாதத்தில் மிதக்கின்றது
செவ்விந்தியர் பாட்டு
மூங்கில் பேசப்பேச
தோல்மேளம் கொட்டக் கொட்ட
மூச்சு முட்டுகின்றது
துயரம் உடைகின்றது"
கருத்து/ கவியாக்கம்
என்றென்றும் அன்புடன்,
  கி.பி. அரவிந்தன்
 
 11.6.1999
 தொலைபேசி-தொலைநகல் : 33-1-34 50 62 56
 மின்னஞ்சல்          : kipian@free.ft
: kipian@hotmail.com
 
 
 
No comments:
Post a Comment