Friday, December 2, 2011
வெங்காயம் - என்ன என்ன நோய்க்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது ?
வெங்காயம் காய்கறிகளின் வயாகரா எனலாம்.இதன் காரத்தன்மைக்குக் காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய்யாகும். இதுதான் நமது கண்களில் கண்ணீர் வர காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைய உள்ளன.
பாலுணர்வு அதிகமாக:- வெங்காயம் பாலுணர்வைத் தூண்டக் கூடியது.
சளி, இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் ஆகியன நீங்க:-
வெங்காய சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
தலை வழுக்கை போக நரைமுடி நீங்க:-
தலை வழுக்கையாவதையும் முடி நரைப்பதையும் இது தடுக்கும்.
விஷம் நீங்க:-
தேனீயோ கொளவியோ கொட்டினால் வெங்காயத்தை நறுக்கி தேய்க்கலாம்.
படை தேமல் போக:-
படையோ தேமலோ இருந்தால் அதன்மீது வெங்காயச் சாற்றைப் பூசிவந்தால் அது மறைந்துபோகும்.
நரம்புதளர்ச்சி குணமாக:-
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
ரத்த சுத்தி:-
ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க இது உதவி செய்யும்.
சரும நோய்க்கு :-
முகச்சுருக்கம், தோல் சுருக்கத்தையும் இது நீக்கும்
சிறு நீர்பை கற்கள்:-
சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடலாம்.
மேக நோய்க்கு:-
பதநீயில் வெய்காயாத்தை நறுக்கிபோட்டு குடித்து வந்தால் மேக நோய் போகும். வெங்காயத்துடன் அவரை இலையையும் சேர்த்து அதைத்து சாப்பட்டு வந்தால் மேக நோய் போகும்.
மன பிரச்சனைகளுக்கு:-
கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றினால் நிறைய வெங்காயம சாப்பிடலாம்.
உடல் பலமாக:-
வேக வைத்த வெங்காயத்துடன் தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலமாகும்.
மூர்ச்சை தெளிய:-
வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், திடீரென மூர்ச்சையானவர்கள் தெளிவார்கள்.
பித்தம் ஏப்பம் போக:-
நாழு வெங்காயத்தை எடுத்து சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பி்டால் பித்தம், ஏப்பம் போகும்.
பல்வலி ஈறுவலி குறைய:-
வெங்காய சாறுடன் வெந்நீரை கலந்து வாய் கொப்பளித்ததால் பல்வலி ஈறுவலி குறையும்.
மூட்டு வலி குறைய:-
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி இருக்குமிடத்தில் தடவினால் மூட்டு வலி குறைந்துவிடும்.
நல்ல தூக்கம் வர :-
வெங்காய சாறுடன் தண்ணீரை கலந்து குடித்தால் நல்லா தூக்கம் வரும்.
இதை தவிர மாரடைப்பு, பக்கவாதம் புற்றுநோய் ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது இந்த வெங்காயமாகும்.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையது. இரண்டும் ஒரே பலனையே தரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment