Thursday, December 1, 2011

மிளகு ---மிக சிறந்த ஒரு வரப்ரசாதம்

தேரையர்

நமக்கு தினமும் இந்த மிளகு கர்ப்ப முறைக்கு தேவை நூற்றி தொன்னிற்றெண்டு மிளகு மட்டுமே.
முதல் நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு மிளகு என்று முதல் ஏழு நாட்கள் வரை வெறும் வாயில் இட்டு மென்று விளுங்கிடல் வேண்டும்.
பின்னர் எட்டாம் நாள் முதல் ஆறு மிளகு ,
ஒன்பதாம் நாள் அய்ந்து மிளகு,
பத்தாம் நாள் நான்கு மிளகு, என்று பதிமூன்றம் நாள்
ஒரு மிளகு,

மறுபடி பதினான்காம் நாள் ஒரு மிளகு
பதினைந்தாம் நாள் இரண்டு மிளகு இப்படி தொடர்ந்து கூடி மற்றும் குறைத்து ஒரு மண்டலம் மட்டும் {நாற்பத்து எட்டு நாட்கள் } சாப்பிட்டு வந்தால் உடல் ஒளி பெறும். ஆயுள் அதிகரிக்கும் . சொன்னவர் தேரையர்

காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் இந்த மிளகினை உண்ணலாம் . ஆனால் இதை சாப்பிடுவதற்கு முன்னால் மூன்று மணி நேரத்திற்கு எதுவும் உண்ணக்கூடாது . பத்தியமாக மது மாமிசம் தவிர்த்தல் வேண்டும்.

மிக எளிதான அதே நேரத்தில் மிக சிறந்த ஒரு வரப்ரசாதம் .

No comments:

Post a Comment